♪♫
TA-1499
Tamil
இஸ்ரவேலின் ஜெயபலமே
Isravelin Jeyabelame
17
views
பல்லவி
இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே பிரயோஜனமானதை போதித்து – நான் நடக்கும் பாதையைக் காட்டினீர் வாழ் நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுள் எல்லாம் ஆராதிப்பேன்
1ம் சரணம்
நான் எதிர்ப்பார்க்கும் முடிவுகளை ஜெயமாகத் தருபவரே சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தைத் தருபவரே துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தைத் தருபவரே
2ம் சரணம்
உம் (உங்க) வஸ்திரத்தின் தொங்கலினால் ஆலயத்தை நிரப்பினீரே எங்களையும் நிரப்பிடுமே உங்களைப் போல மாற்றிடுமே ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.