♪♫
TA-1509
Tamil
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
Iyaesu Raajaa Aezhai En Ullam
15
views
பல்லவி
இயேசுகிறிஸ்து என் ஜீவன் சாவது ஆதாயமே வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்
1ம் சரணம்
இயேசுவை நான் எற்றுக் கொண்டேன் அவருக்குள் நான் வேர் கொண்டேன் அவர் மேல் எழும்பும் கட்டடம் நான் அசைவதில்லை தளர்வதும் இல்லை
2ம் சரணம்
என்ன வந்தாலும் கலங்கிடாமல் இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன் அறிவைக் கடந்த தெய்வீக அமைதி அடிமை வாழ்வின் கேடயமே
3ம் சரணம்
எனது ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள்ளே மறைந்தது ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில் மகிமையில் நான் வெளிப்படுவேனே
4ம் சரணம்
கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன் அவரை அறியும் அறிவிலே வளர்வேன் அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.