ஜகநாதா, குருபரநாதா, திரு
Jaganaatha Gurubaranaatha Thiru
ஜகத்து நீதிபதியே, சந்தேகம், மருள் நீக்கிடும்; மகத்வ உம்தன் காட்சியே மெய்மை விளங்கச் செய்திடும்; விரைந்து வாரும்; உம்முன்னே மறையும் எந்தப் பொய்யுமே.
மன்னா மன்னா, வந்தாளுமே மண்ணிலும் தாசர் நெஞ்சிலும்; இன்னா இக்கட்டு நீங்கவே இகத்தின் பாவம் மாய்ந்திடும்! விரைந்து வாரும்; உம்முன்னே மறையும் எந்தத் தீங்குமே.
எல்லா நரர்க்கும் ஜீவனே, எவ்வீட்டிலும் பலத்தோடும் பொல்லாத சாவு புகவே பாடுற்றோம் அடியார்களும்; விரைந்து வாரும், உம்முன்னே மறைந்து நோவு சாவுமே.
மெய்யான எங்கள் ஜோதியே, மங்குல எப்பாலும் மூடவும், அய்யா, உம்தன் வருகைக்கே ஆசித்து நின்றோம் நாங்களும்; விரைந்து வாரும், யேசுவே, வந்தடியாரைத் தேற்றுமே.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.