♪♫
TA-2235
Tamil
ஜெப ஆவி
Jeba Aavi
20
views
பல்லவி
ஜெப ஆவி இன்னும் இன்னும் ஊற்ற வேண்டுமே உம் மகிமையை இன்னும் இன்னும் பார்க்க வேண்டுமே ஆவியில் நிரம்பணும் இரகசியம் பேசணும் கை அளவு மேகம் அதை என் கண்கள் பார்க்கணும் வானம் திறக்கணும் அற்புதம் நடக்கணும் எழுப்புதல் பெருமழை தேசத்தில் பெய்யணும் கண்கள் திறக்கணும் மறுரூபம் ஆகணும் என் தேச ஜனமெல்லாம் உம் பக்கம் திரும்பணும் இரட்சிப்பு பெருகனும் சபைகள் நிரம்பணும் பின்மாறி மழையினால் தேசம் நிரம்பணும் கசப்புகள் மாறனும் ஒருமனம் பெருகனும் சாட்சியாய் வாழனும் உம் நாமம் உயர்த்தனும் வல்லமை இறங்கணும் நுகங்கள் உடையனும் அபிஷேக மழையினால் வாழ்க்கை நிரம்பணும்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.