TA-1518
Tamil

ஜீவனே நித்திய ஜீவனே

Jeevane nithya jeevane

0
views
பல்லவி

ஜீவனேசு கிருபாசன்னா எனின் சிறுமை தீர்த்தருள் ஓசன்னா!

1ம் சரணம்

காவிரி ஆதஞ்செய் பாவமூடவே கடிய பேய் நரகோடவே பூவுள்ளோருமைப் பாடவே பரி பூரணக்ருபை நீடவே – ஜீவ

2ம் சரணம்

தொண்டர் பாதக ரண்டகங் கெட துயரமேபடும் அத்தனே தொண்டன் நின் சரணண்டினேன் எனின் நோயைத்தீர் பருசுத்தனே! – ஜீவ

3ம் சரணம்

அடியர் அடி பெற அலகை அழல் விழ அரிய பொன்முடி கொடுபட படியல் நான் படும் கொடிய விடர் கெட பலதுதீமையு முறிபட – ஜீவ