TA-2237
Tamil

காலமோ செல்லுதே வாலிபம்

Kaalamoa Selludhae Vaalibam

21
views
பல்லவி

காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வி எல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

1ம் சரணம்

கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

2ம் சரணம்

துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னல் எல்லாம் மாறிப்போம் வியாதி எல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

3ம் சரணம்

வாழ்க்கையை இயேசுவால் நாட்களைப் பூரிப்பாய் ஓட்டத்தை முடிக்க காத்துக்கொள் விசுவாசத்தை மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.