♪♫
TA-1523
Tamil
காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
Kaariyaththai Vaaykkappannum
14
views
பல்லவி
காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர் எதிர்கால பயம் இல்லையே நீர் எனக்குள் இருப்பதால் (2) எதை குறித்தும் கலக்கம் இல்ல எனக்குள்ளே இருப்பதனால் (2)
1ம் சரணம்
நம்பும் மனிதர் சந்தோஷமாய் மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2) அவர்களை நீர் காப்பாற்றுவீர் அனுதினமும் கைவிடாமல் (2)
2ம் சரணம்
தெரிந்துகொண்டீர் உமக்கென்று அதை நான் அறிந்துகொண்டேன் (2) நீதியுள்ள பலி செலுத்தி உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2)
3ம் சரணம்
உலகம் தருகின்ற மகிழ்வை விட மேலான மகிழ்ச்சி நீரே (2) சமாதானத்தால் நிரப்புகிறீர் சுகம் தந்து நடத்துகிறீர் (2)
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.