TA-2238
Tamil

காக்கும் தெய்வம் இயேசு இருக்க

Kakkum Deivam Yesu Iruka

20
views
பல்லவி

காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே

1ம் சரணம்

இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர்தானே

2ம் சரணம்

பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில் கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம்

3ம் சரணம்

காண்கின்ற உலகம் நமது இல்லை காணாத பரலோகம் தான் நமது குடியிருப்பு

4ம் சரணம்

சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள் மகிமையை கொண்டு வரும் மறவாதே என் மனமே

5ம் சரணம்

சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும் தெரிந்துகொள் மனமே சீடன் அவன் தானே

6ம் சரணம்

மலைகள் விலகும் குன்றுகள் அகலும் கிருபை விலகாதென்றார் மனது உருகும் தெய்வம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.