TA-1525
Tamil

காலையும் மாலையும் பாடி துதிப்போம்

Kalaiyum Malaiyum Paadi

16
views
பல்லவி

காலா காலம் உன்னைக் காத்த பிதா இன்னும் காத்துக்கொள்ளுவார் கடைசி வரை அநாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர் அன்பு காருண்யம் உடையவரே

1ம் சரணம்

நீ செல்லும் பாதையில் உன் கரத்தை நீதியின் வலக்கை தாங்கிடுமே நான் உன் தேவன் என்றார் யெகோவா நித்திய கன்மலை ஜெனிப்பித்தாரே திடன் கொள்ளவே

2ம் சரணம்

ஆயிரம் தலைமுறை ஆண்டுகளும் ஆண்டவர் இரக்கம் தயவிருக்கும் வாக்கு மாறிடாரே கர்த்தாவே வல்லவர் சொற்படி நடப்பதாலே செழிக்கும் வாழ்வே

3ம் சரணம்

இவ்வன லோகத்தில் உபத்ரவமே ஒவ்வொரு தினமும் சோதனையே ஏசு ஜீவிப்பதால் திடன் கொள் எதிர்ப்பு சக்திகள் எதுவும் உன்னை மேற்கொள்ளாதே

4ம் சரணம்

வருட துவக்க முதல் முடிவு வரையும் உன்னை கண்ணோக்கிடுவார் கன்மலை நிழலாய் உன்மேலே கடந்து பறக்கும் பறவை போல தினமும் காப்பார்

5ம் சரணம்

அப்பமும் திராட்சரசம் கொடுத்து ஆபிரகாமை ஆசீர்வதித்தார் உன்னையும் எதிர்கொண்டு வானில் உன்னதமானவர் வருகின்றாரே பறந்து செல்வாய்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.