TA-1526
Tamil

உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை

Kalangina Nerangalil

17
views
பல்லவி

கலங்கும் என் தேசம் மீட்கப்பட வேண்டும் கொள்ளை கொண்டு போகும் நோய்கள் அழிந்திட வேண்டும்-2

1ம் சரணம்

அழகான தேசமே அழகான தேசமே ஆண்டவர் கையில் நீ விழுந்திட வேண்டும் ஓவ்வொரு உயிரும் விலையேறப்பெற்றதே ஒவ்வொரு ஜீவனும் ஆண்டவர் படைப்பே தேசமே என் தேசமே நீ சுகமாக வேண்டுமே மன்றாட்டு ஜெபம் எல்லாம் மருந்தாக வேண்டுமே-2

2ம் சரணம்

அலங்கோல வாழ்க்கை எல்லாம் அழகாக வேண்டுமே கண்ணீரின் பள்ளத்தாக்கும் களிப்பாக வேண்டுமே சாத்தானே நீ விதைப்பதெல்லாம் ஒரு போதும் விளையாதே இயேசப்பாவின் இரத்தம் ஒன்றே உன்னை அழிக்கும் விசுவாச ஜெபங்கள் எல்லாம் ஜெயமாக மாறுமே எல்லைகள் எல்லாம் செழிப்பாக மாறுமே-2 என் தேசமே என் தேசமே நீ சுகமாக வேண்டுமே மன்றாட்டு ஜெபம் எல்லாம் மருந்தாக வேண்டுமே-2

3ம் சரணம்

மரணத்தின் ஓலங்கள் மனதை உடைக்குதே எரிகின்ற சரீரங்கள் உணர்வை பிளக்குதே ஏன் என்ற கேள்விகள் எங்கேயும் தொனிக்குதே இறைவா என் இயேசுவே இறங்கிடுமே… விசுவாச ஜெபங்கள் எல்லாம் ஜெயமாக மாறுமே எல்லைகள் எல்லாம் செழிப்பாக மாறுமே-2 என் தேசமே என் தேசமே நீ சுகமாக வேண்டுமே மன்றாட்டு ஜெபம் எல்லாம் மருந்தாக வேண்டுமே-2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.