TA-1528
Tamil

கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன்

Kalvaari Kurusandai Yengi Nindren

16
views
பல்லவி

கல்வாரி குருசில் கர்த்தாவின் மரணம் கண்டாலே போதும் கல் மனம் உருகும் கண்ணீருடன் நோக்கி விண்ணப்பம் செய்திட கண்களை ஏறெடுப்பேன் - இயேசுவே

1ம் சரணம்

பற்பல சோதனை தினந்தோறும் வந்தாலும் பரனேசு நாமத்தை விசுவாசிப்பேனே எனக்காக எல்லாமே செய்து முடிப்பார் எனக்காக மாண்ட என் இயேசு போதும்

2ம் சரணம்

நோய் கொண்டு தேகத்தில் அவதி நான் பட்டாலும் நான் நம்பும் ஆண்டவர் என்னைக் கைவிடாரே பெலவீனம் நோய்களையும் எனக்காக சுமந்தார் பார்ப்பேன் சிலுவை மீட்பைப் பெறுவேன்

3ம் சரணம்

பொன் பொருள் ஆசைகள் பறந்தோடிப்போகுமே இன்பங்கள் மாயைகள் மறைந்தே ஒழியும் என் இயேசு எனக்கென்றும் அழியாத செல்வம் தன் ஜீவன் தந்தார் மெய் வாழ்வு ஈந்தார்

4ம் சரணம்

இயேசுவின் அன்பிதோ என்றென்றும் மாறாதே எத்தனை துன்பங்கள் என்னை சோதித்தாலும் எப்போதும் இயேசுவின் சிலுவை என் தஞ்சம் என்னோடிருப்பார் இயேசென்னை காப்பார்

5ம் சரணம்

என் சித்தம் அல்லவே ஒரு போதும் வேண்டாமே உம் சித்தம் மட்டுமே நடந்தேற வேண்டும் கர்த்தரின் வீட்டில் நான் களிகூர்ந்து பாடி நித்தம் நிலைத்து நீடூழி வாழ்வேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.