TA-1529
Tamil

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

Kalvari annbai ennidum velai

16
views
1ம் சரணம்

கல்வாரியின் காட்சியே காண்பீரே காண்பீரே கஸ்திகளடைந்துமே ஜீவனைத் தந்தாரே பாவ பாரம் ரோகம் யாவும் போக்கவே உம் இயேசுவே அழைக்கிறார் இதோ (2) இயேசுவல்லாது புவியில் வேறு புகலிடமுண்டோ?

2ம் சரணம்

இன்னமும் அழைக்கிறார் தாமதம் செய்வதேன் இன்பரின் கிருபையின் வாசலும் மூடுதே உந்தன் ஜீவன் மீட்பு கொள்ள என்ன ஈடு செய்குவீர் இந்த நல் நேரமே சிந்தை செய்குவீர்

3ம் சரணம்

நெஞ்சம் நொந்து வாடியே சஞ்சலம் கொண்டோரே மிஞ்சும் ரோகத்தாலே நீர் நொந்துமே மாள்வதேன் தஞ்சம் இயேசு உந்தன் பேர்க்காய் ஏற்றாரே தழும்புகள் கெஞ்சுதல் கேட்பாரே அஞ்சி நிற்பதேன்

4ம் சரணம்

இயேசுவின் நற்சாயலாய் மாறவே நீருமே நேசமாய் தம் தூதுகள் கேட்கவே செய்வாரே பெந்தெகொஸ்தின் ஆவியாலே ஜீவன் உம்மில் பாயவே சந்திப்பார் சந்ததம் வந்திடுவீரே

5ம் சரணம்

ஆதிகாலம் போலவே ஜொலிக்கவே வரங்களும் ஆதிசபை போலவே ஒலிக்கவே ஜெபங்களும் இயேசுவின் வருகையும் சமீபமாகும் காலமே சோர்ந்திடா சேவையில் சேர்நது வாருமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.