கண்டீர்களோ சிலுவையில்
Kandeerkaloo sivuvaiyil
கண்டேன் தேவ மகிமையைக் கண்டேன் கண்கள் மலர மகிமை அடைந்தேன்-மனக்
மனிதர் மகிமை வாடிப் போகின்றதே மண்ணில் வளர்கின்ற பசும்புல்லைப் போல வாடிடா கிரீடம் மங்கிடா மகிமை வந்தென்னைச் சந்திக்குதே - என்றும்
மூடும் திரைச்சிலை கிழிந்ததினால் மா பரிசுத்த ஸ்தலமதைக் கண்டேன் பரிசுத்த ஆவி விடுதலை ஈந்தார் பறந்திட பெலன் அருள்வாய் - தூய
பரம தேவ தரிசனம் தோன்றிடுதே பரமானந்தம் இதயத்தில் பொங்க மகிமையே உயர கிருபையே பெருக மா பெலன் இறங்கிடுதே - தேவ
கேபார் இதெக்கேல் நதியோரத்திலே கண் கண்ட தரிசனம் போல வானம் திறந்து தூதர் பறந்து தானம் பொழிகின்றார் - நல்ல
கேரூபீன்கள், சேராபீன்கள் எழும்பி கர்த்தர் மகிமையைச் சுமந்து பறந்து பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடித் துதிக்கின்றனர் - அவர்
பூலோகத்துப் பிரபுக்களும் கண்டிராத மேலோகத்தின் மகிமையைக் கண்டோம் பாலகர் வாயில் பேதைகள் நாவில் பாடிடும் துதி அளித்தார் - சிறு
கோடா கோடி தூதர்களோடொருநாள் கர்த்தர் மேகத்திலே வருவாரே பக்தர்களோடு பரமனைக் காண பறந்தங்கு சேர்ந்திடுவேன் - திரள்