TA-1538
Tamil

கர்த்தா! எந்தனை நீர்

Karthaa Enthanai Neer

15
views
1ம் சரணம்

கர்த்தா, நீர் வசிக்கும் ஸ்தலத்தை நேசிப்போம்; பாரின்பம் யாவிலும் உம் வீட்டை வாஞ்சிப்போம்.

2ம் சரணம்

உம் ஜெப வீட்டினில் அடியார் கூட, நீர் பிரசன்னமாகியே உம் மந்தை வாழ்த்துவீர்.

3ம் சரணம்

மெய் ஞானஸ்நானத்தின் ஸ்தானத்தை நேசிப்போம் விண் புறாவாம் ஆவியால் பேரருள் பெறுவோம்

4ம் சரணம்

மா தூய பந்தியாம் உம் பீடம் நேசிப்போம் விஸ்வாசத்தால் அதில் சமுகம் பணிவோம்.

5ம் சரணம்

மெய் ஜீவனுள்ளதாம் உம் வார்த்தை நேசிப்போம் சந்தோஷம், ஆறுதல் அதில் கண்டடைவோம்.

6ம் சரணம்

உன் அன்பின் பெருக்கை இங்கெண்ணிப் போற்றுவோம் விண் ஜெய கீதமோ எப்போது பாடுவோம்?

7ம் சரணம்

கர்த்தா, உம் முகத்தை கண்ணாரக் காணவே, உம்மை இப்பாரினில் நேசிக்க ஏவுமே.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.