TA-1541
Tamil

கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய

Karthaavae Neer Ennai

0
views
1ம் சரணம்

கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் கைவிடார், பொல்லாரின் சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார்; சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத் தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார்.

2ம் சரணம்

கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போ நான் ஜீவனுக்கு நேரே நடக்கிறேன்; லௌகீக வாழ்வின் பாதை வேண்டாம், நான் இயேசுவை பின்பற்றி, இங்கே வாதை சகித்தால், மாநன்மை.

3ம் சரணம்

என்மேலே பாரமாக வரும் இக்கட்டிலே பராபரன் அன்பாக என்னோடிருப்பாரே; பொறுக்கிற வரத்தை அவரிடம் கேட்பேன், அவ்விதமாய் இக்கட்டை சகித்து வெல்லுவென்.

4ம் சரணம்

கசப்பும் கர்த்தராலே வரும், நான் பின்வாங்கேன்; ஜெபத்தில் ஆசையோடே விண்ணப்பம் பண்ணுவேன்; அப்போது தயவாக காப்பாரே, கைவிடார்; இக்கட்டு பெரிதாக போம்போது தேற்றுவார்.

5ம் சரணம்

அநேகர் ஆசைகொள்ளும் பொருளை வாஞ்சியேன்; கர்த்தாவின் வார்த்தை சொல்லும் மெய்ப்பொருள் நாடுவேன்; என் பொக்கிஷம், என் செல்வம், என் ஆஸ்த்தி கிறிஸ்துவே; என் பாக்கியம், பேரின்பம், எல்லாம் என் மீட்பரே.

6ம் சரணம்

என் இயேசுவை நான் பற்றி தொடர்வேன் ஆவலாய்; என் சாபத்தை அகற்றி ரட்சித்தார் நேசமாய்; நான் தப்ப எனக்காக தம் ரத்தம் சிந்தினார்;