TA-1542
Tamil

கர்த்தாவை நம்புவோரை

Karthaavai Nambuvorai

15
views
பல்லவி

கர்த்தாவே உமது கூடாரத்தில் தங்கி வாழ்பவன் யார் குடியிருப்பவன் யார்

1ம் சரணம்

உத்தமனாய் தினம் நடந்து நீதியிலே நிலை நிற்பவன் மனதார சத்தியத்தையே தினந்தோறும் பேசுபவனே

2ம் சரணம்

நாவினால் புறங்கூறாமல் தோழனுக்குத் தீங்கு செய்யாமல் நிந்தையான பேச்சுக்களை பேசாமல் இருப்பவனே

3ம் சரணம்

கர்த்தருக்குப் பயந்தவரை காலமெல்லாம் கனம் செய்பவன் ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும் தவறாமல் இருப்பவனே

4ம் சரணம்

கைகள் தூய்மை உள்ளவன் இதய நேர்மை உள்ளவன் இரட்சிப்பின் தேவனையே எந்நாளும் தேடுபவனே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.