TA-1544
Tamil

கர்த்தாவின் அற்புதச் செய்கை

Karthaavin Arputha Seikai

15
views
பல்லவி

சொற்படி நடப்போம் செம்மை வழி செல்வோம் நன்மை பல நற்கிரியை செய்வோம் நம்மை ஆசீர்வதிப்பாரே - கர்த்தர்

1ம் சரணம்

கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருப்பதும் விருதா அதிகாலை எழுந்து வேலையில் தரித்தாலும் வருத்தத்தின் அப்பம் புசித்தாம் வீணும் விருதாவுமாகும்

2ம் சரணம்

இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் இந்த ஈவு தேவன் அருளும் சுதந்திரம் அவராலே இதுவே கிடைக்கும் பலன் கனியே ஆயிரம் தலைமுறையாக ஆண்டவரை சேவிப்போமே

3ம் சரணம்

வால வயதின் குமாரர்களே பலவான் கையில் அம்புக்கு ஒப்பாவார் ஒலிமுக வாசலில் சத்துருக்களுடனே என்றுமே நாணமடையாமல் நின்றவர்கள் பேசுவார்கள்

4ம் சரணம்

புத்தியுள்ளவன் கற்பாறை மேல் பத்திரமாக வீட்டைக் கட்டுவானே பெருமழை வந்தாலும் அந்த வீடு விழாதே மணலின் மேல் கட்டினவன் வீடோ மோசமாகும் நாசமாகும்

5ம் சரணம்

கர்த்தர் இயேசு கிறிஸ்துவையே கனம் பண்ணி நீ விசுவாசித்தாலோ நீயும் உந்தன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் தேவனின் சித்தம் செய்து வாழ்ந்தே தேவ இராஜ்ஜியமே சேர்வோம்.ptUகர்த்தர் வீட்டைக் கட்டாராகில் கட்டுபவர்களின் பிரயாசம் வீணும் விருதாவுமாகும் கர்த்தர் கட்டும் எங்க

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.