கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
Karthar Ellaam Paarthukolvaar
கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம் பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2)
கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிக கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம் சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2 களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்த நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம் ஆமேன் ஆலேலூயா – 8
தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிக செழிப்பான இடத்தில் அமரச் செய்தார் – (2) எம் இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய – 2 பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்- மீட்பின் சாட்சிகளை சபையில் சொல்லுவோம் ஆமேன் ஆலேலூயா – 8
மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார் – எம் வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார் – (2) எம் ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார் – 2 யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம் – பரிகாரி இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆலேலூயா – 24