TA-2241
Tamil

கர்த்தர் மேல் பாரத்தை

Karthar Mel Barathai Vaithu

21
views
பல்லவி

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார்

1ம் சரணம்

நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார்

2ம் சரணம்

நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய் இருக்கின்றவர்

3ம் சரணம்

தகப்பனும் தாயும் கைவிட்டாலும் அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

4ம் சரணம்

கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் நிற்பவன் யார்

5ம் சரணம்

வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

6ம் சரணம்

என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.