TA-1558
Tamil

தேவ எக்காளம் தொனிக்கையில் மேகமீதில் வருவார்

Karthar thamae

18
views
பல்லவி

கர்த்தர் துயர் தொனியாய் கதறி முகம் கவிழ்ந்தே இருள் சூழ்ந்த தோட்டத்திலே இதயம் நொறுங்கி ஜெபித்தார்

1ம் சரணம்

மரணத்தின் வியாகுலமோ மனிதர் துணை இல்லையோ தேவ தூதன் தேற்றிடவே தருணம் நெருங்க ஒப்படைத்தார் துன்ப சுமை சுமந்தார்

2ம் சரணம்

துக்கத்தால் தம் சீஷர்களை தலை சாய்த்து தூங்கினரே தம்மை மூவர் கைவிடவே தூரமாய் கடந்தே திகிலடைந்தார் தன்னந் தனிமையிலே

3ம் சரணம்

பிதாவே இப்பாத்திரத்தின் பங்கினை நான் ஏற்றுக் கொண்டேன் ஆட்டும் உமது சித்தம் அது நீங்கிடுமோ என்றுரைத்தார் ஆ இரத்த வேர்வையுடன்

4ம் சரணம்

திறந்த கெத்சமனேயில் துணிந்து வந்த பகைஞன் என்ன துரோகம் செய்திடினும் எந்தன் சிநேகிதனே என்றழைத்தார் என்ன மா அன்பிதுவோ

5ம் சரணம்

பரமன் ஜெப சத்தமே பூங்காவினில் கேட்கின்றதே பெருமூச்சுடன் அழைக்கும் அவரோடிணைந்தே கண்ணீருடன் ஆவியிலே ஜெபிப்பேன்

6ம் சரணம்

இயேசு தாங்கின துன்பங்கள் என்னைத் தாண்டியே செல்லாதே எனக்கும் அதில் பங்குண்டே சிலுவை மரணப் பாடுகளால் சீயோனில் சேர்ந்திடுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.