TA-1560
Tamil

கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரே

Karthar unnatharae

16
views
பல்லவி

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் - இன்றும் கல்லறை திறந்திருக்க நற்செய்தி தரிசனங்கள் சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்

1ம் சரணம்

காரிருளில் கண்ணீருடன் கல்லறை நோக்கியே சென்றனரே அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள் ஆச்சர்யம் அடைந்தனரே

2ம் சரணம்

மரியாளே என்ற சத்தம் மா திகைப்பாய் அவள் கேட்டிடவே ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி ரபூனி என்றழைத்தாள்

3ம் சரணம்

பயந்திடவே சீஷர்களே பூட்டின உள்ளறை தங்கினரே மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி மேசியா வாழ்த்தி சென்றார்

4ம் சரணம்

சந்தேகித்தான் தோமாவே சீஷர்கள் கூறின சாட்சிதனை உயிர்த்த நம் ஏசுவின் தேசத்தைத் தொட்டே உண்மையைக் கண்டுணர்ந்தான்

5ம் சரணம்

அதிகாலை கரையோரம் அன்பரைக் கண்டு பிரமித்தனரே பேதுரு அன்பினை சோதித்துக் கேட்டார் போஜனம் பகிர்ந்தளித்தார்

6ம் சரணம்

மரித்தவரே உயிர்த்தெழுந்தார் மானிடர் தேடிடும் தேவனிவர் ஜீவனைத் தந்து நம் பாவங்கள் தீர்த்து ஜீவனோடுயிர்த் தெழுந்தார்

7ம் சரணம்

கர்த்தரின் நாள் நெருங்கிடுதே கிறிஸ்துவுக்குள் மரித்தோர் எழும்ப கல்லறைகள் திறக்க பறப்பாரே கண்ணிமை நேரத்திலே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.