TA-1562
Tamil

Kartharai Nambidungal

Kartharai Nambidungal

18
views
பல்லவி

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றி கொள்வோம்

1ம் சரணம்

ஜீவ தேவன் பின் செல்லுவோம் ஜீவ ஒளிதனை கண்டடைவோம் மனதின் காரிருள் நீங்கிடவே மா சமாதானம் தங்கும்

2ம் சரணம்

உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை கண்கள் அவன் மீது வைத்திடுவார் கருத்தாய் காத்திடுவார்

3ம் சரணம்

உள்ளமதின் பாரங்கள் ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம் இயேசு வந்தாதரிப்பார்

4ம் சரணம்

அன்புமிகும் அண்ணலிவர் அருமை இயேசுவை நெருங்குவோம் தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே தாங்கி அணைத்திடுவார்

5ம் சரணம்

நீதிமானின் சிரசின் மேல் நித்திய ஆசிர் வந்திறங்குமே கிருபை நன்மைகள் தொடருமே கேட்பது கிடைக்குமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.