♪♫
TA-1563
Tamil
தேவ அன்போ மாறிடாதே
Kartharin Naal
0
views
பல்லவி
கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. (2) கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி.
1ம் சரணம்
ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ? பாவ மனங் கல்லோ? -உனக்காய் பகிரப்பட்ட தல்லோ? தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட.
2ம் சரணம்
தேவ அன்பைப் பாரு; - கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு; பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அந்நியன் ஆகாதே.
3ம் சரணம்
அன்பின் விருந்தாமே - கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே; துன்பம் துயர் போமே - இருதயம் சுத்த திடனாமே; இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா.