TA-1566
Tamil

புத்தகக் கணக்கில் கண்ட

Kartharukku kanikaietho

16
views
பல்லவி

.பச்சைக்கிளி, மூசுக்கட்டைப் பூச்சி புழுக்கள் வெட்டுக்கிளி பட்சித்து நாசம் வந்தாலும் உபவாசித்தும் ஜெபம் செய்திடுவாய் ஜெபத்திற்கவர் பதில் கொடுப்பார்

1ம் சரணம்

காத்திருந்து ஜெபிப்பதாலே புதுபெலன் கழுகு போல் செட்டையடித்து எழும்ப ஓடினாலும் நீ இளைப்படையாய் நடந்திட்டாலும் சோர்வடையாய்

2ம் சரணம்

விக்ரகங்கள் சொரூபங்களை வணங்கினால் வெட்கப்பட்டு, துக்கப்பட்டு, மாண்டழிவாய் ஆவியாய் இருக்கின்ற நம் தேவனை ஆவியோடு நீ ஆராதிப்பாய்

3ம் சரணம்

உனக்கு விரோதமாய் எந்த ஆயுதமும் உருவாக்கப்பட்டும் அது வாய்க்காதே போம் இது கர்த்தர் தரும் சுதந்திரமே இயேசு அருளும் வாக்குத்தத்தமே

4ம் சரணம்

சோதனைகள் வேதனைகள் யாவும் ஓடிப்போம் சத்துருவின் சதி திட்டம் முறிந்து விழும் வெற்றி எட்டு திசை கேட்டிட நீ வல்லமையுடன் சாட்சி கூறுவாய்

5ம் சரணம்

கிருபையில் நம்பிக்கையுடன் காத்திருப்பாய் கிறிஸ்தேசு வெளிப்படுவார் விரைவாய் மகிமையில் அவரை சந்திக்க மறுரூபமாய் பறந்து செல்வாய்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.