♪♫
TA-1569
Tamil
இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
Karunagara Deva Irangi
0
views
பல்லவி
கருணைக் கடலாம் – இயேசுவே கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள்
1ம் சரணம்
வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை வர்த்திக்க வேணும் விஸ்வாசத்தை புகழ்ந்திடவே திரு நாமத்தை-எங்கள்
2ம் சரணம்
தாரக மற்ற தரணி யோரை தாமத மின்றியே மீட்டிட எழுந்திடுமே இந்நேரமே- எங்கள்
3ம் சரணம்
அப்போஸ்தலர் காலம் போல அற்புதங்கள் அடையாளங்கள் அதிசய நாமத்தில் ஓங்கிட-எங்கள்
4ம் சரணம்
முடவர் குதிக்க ஊமை துதிக்க செவிடர் குருடர் கூனரும் சுகமடைந்து உமைப் பாடிட – எங்கள்
5ம் சரணம்
கன்னியாகக் கறை களின்றி மன்னன் தோன்றும் வேளையில் பறந்திடவே சபை மே-கத்தில் – எங்கள்
6ம் சரணம்
தயா கரமே தஞ்சம் நீரே தியாகமே மேன்மையாம் தாசரே அபிஷேகித்து உபயோகியும் – எங்கள்