TA-1572
Tamil

Katthu kulira padungal

Katthu kulira padungal

15
views
பல்லவி

கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும் இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

1ம் சரணம்

துப்பாக்கி ஏந்தும் கைகள் உம் வேதம் ஏந்த வேண்டும் தப்பாமல் உம் விருப்பம் எப்போதும் செய்ய வேண்டும்

2ம் சரணம்

பழிக்கு பழி வாங்கும் பகைமை ஒழிய வேண்டும் மன்னிக்கும் மனப்பான்மை தேசத்தில் மலர வேண்டும்

3ம் சரணம்

பிரிந்த குடும்பமெல்லாம் மறுபடி இணைய வேண்டும் பெற்றோரின் கண்ணீர் எல்லாம் களிப்பாய் மாற வேண்டும்

4ம் சரணம்

வீடு இழந்தவர்கள் இடங்கள் பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு பெற வேண்டும் மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.