TA-1574
Tamil

கீதங்கள் பாடியே போற்றிடுவோம் - சங்

Keethankal Paatiyae Poerrituvoem

19
views
பல்லவி

கேரூபின் சேராபின்கள் ஓய்வின்றி உம்மைப் போற்றுதே (2) பூலோக திருச்சபை எல்லாம் ஓய்வின்றி உம்மை போற்றிட நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எங்கள் பரலோக ராஜாவே (2) இந்த வானம் பூமியுள்ளோர் யாவும் உந்தன் நாமம் உயர்த்தட்டுமே

1ம் சரணம்

பூமியனைத்திலும் உந்தன் மகிமை நிறைந்து வழிகின்றதே ஆலயத்திலும் உந்தன் மகிமை அலையலையாய் அசைகின்றதே துதி கன மகிமைக்குப் பாத்திரர் எல்லாப் புகழும் உமக்குத் தானே

2ம் சரணம்

வானம் உமது சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி நாங்கள் உங்கள் தேவ ஆலயம் நீர் தாங்கும் தூயஸ்தலம் சகலமும் படைத்த என் தேவா நீர் நித்திய சிருஷ்டிகரே

3ம் சரணம்

பரலோகத்தில் உம்மை அல்லா யாருண்டு தேவனே பூலோகத்தில் உம்மைத் தவிர வேறொரு விருப்பம் இல்லை என்றும் உம்மோடு வாழ எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.