Kirubaikaga Kathirukum
Kirubaikaga Kathirukum
கிருபையே - உன்னை இந்நாள் வரையும் காத்தது -என் கிருபையே
பாதையில் கஷ்டம் அனுகிடும்போது பங்கம் வராமலுன்னைத் தாங்கினேன் பெலம் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உனை நான் எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த
சோதனையாலே சோர்ந்திடும் போது சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன் ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன் ஜெயக் கீதங்கள் பாட வைத்திடேன்
ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே ஏங்கும் போது உன் அண்டை வந்திட்டேன் ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்என்றும் உன்னை நான் சொந்தமாக்கினேன்
ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன் செப்பமாக உன் கரம் பிடித்தேன் ஜெய ஜெய கீதங்கள் தொனித்திடச் செய்தேனே சேவை செய்யவும் கிருபை தந்தேனே
என்றென்றுமாக என் கிருபை காட்ட கொண்டேன் உன்னை இம்மண்ணில் பிரித்து என் அரும் மகனே காப்பேனே உன்னை நான் உன் தந்தை நான் உன்னை விடேனே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.