♪♫
TA-1579
Tamil
கிருபையின் சூரியா
Kirubaiyin Suriya
0
views
பல்லவி
கிருபையின் தயாளனே உயிரினும் என்னை நேசித்தீரே – 2 எனக்காய் உம் இரத்தம் துடித்ததே காரணம் ஏனோ உந்தன் பாசமே உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா உம் அன்பிற்கீடேதுண்டோ
1ம் சரணம்
ஆணிகள் மூன்றிலே தொங்கினீரே இரத்தம் எல்லாம் சிந்த துடித்தீரே பாவ பரிகார பலியாகி ஜீவனைக் கொடுத்தே மீட்டீரே உம் அன்பிற்கீடேதுண்டோ -இயேசையா உம் அன்பிற்கீடேதுண்டோ
2ம் சரணம்
கிருபாதார பலியாக அன்பின் வெளிப்பாட்டின் உச்சமாக ஒரே குமாரனையும் தந்து விட்டீர் இவ்வளவாய் என்மேல் அன்புகூர்ந்தீர் உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா உம் அன்பிற்கீடேதுண்டோ
3ம் சரணம்
கிருபையின் தயாளனே உயிரினும் என்னை நேசித்தீரே – 2 எனக்காய் உம் இரத்தம் துடித்ததே காரணம் ஏனோ உந்தன் பாசமே உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா உம் அன்பிற்கீடேதுண்டோ