TA-1581
Tamil

சத்திய கச்சையை அரையினில் கட்டியே

Kirustuvin seenai

18
views
பல்லவி

கிழக்கிலே ஒருநட்சத்திரம் கிளம்பியதம் ஓர் அற்புதம் வானிலே அதின் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்!

1ம் சரணம்

தூதர்கள் கூட்டம் கீத பவனியாய் தூது சொன்னது அற்புதம் அற்புதம் பாமரர் மேய்ப்பர் தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே

2ம் சரணம்

கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால் மன்னன் வரவு அற்புதம் அகிலம் முமுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே

3ம் சரணம்

பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம் சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே

4ம் சரணம்

இயேசுவின் சன்னதி அடைக்கலம் தேடுவோர் வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம் மீண்டும் பிறந்தவர் கூடியோ வாழ்ந்திடும் அற்புதம் அற்புதமே அழகிய மானுடம் உலகெங்கும் விடியும் அற்புதம் அற்புதமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.