TA-1590
Tamil

குதூகலம் கொண்டாட்டமே

Kuthuhalam Kondattame

16
views
பல்லவி

குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பமில்லை இனி என்றுமே ஆனந்தம்

1ம் சரணம்

தள கர்த்தனாம் இயேசு நின்று யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம்

2ம் சரணம்

புவி மீதினில் சரீர மீட்பு என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியைச் சேர்த்திடவே

3ம் சரணம்

ஜெப விழிப்புடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர்நோக்கி நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய் நாம் ஆயத்தமாகிடுவோம்

4ம் சரணம்

ஜீவ ஒளி வீசும் கற்களாக சீயோன் நகர்தனிலே சேர்க்க அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம்

5ம் சரணம்

தேவ தூதர்கள் கானமுடன் ஆரவார தொனி கேட்கும் அவர் கிருபையினால் மறுரூபமாக நம்மை இனிதுடன் சேர்த்திடுவார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.