TA-1593
Tamil

உமக்காக ஊழியம் செய்ய வருகிறேன்

Kuyavane Um Kaiyil Kaliman

17
views
பல்லவி

பெலன் உள்ளவன், பெலன் அற்றவன் பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம், உமக்கது லேசான காரியம்

1ம் சரணம்

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் (2) மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் (2) உமக்கது, லேசான காரியம் — பெலன் உள்ளவன்

2ம் சரணம்

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (2) தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (2) உமக்கது, லேசான காரியம் — பெலன் உள்ளவன்

3ம் சரணம்

இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (2) இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (2) உமக்கது, லேசான காரியம் — பெலன் உள்ளவன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.