மான்கள் நீரோடையை
Maangal Neerodaiyai
மானிட உருவில் அவதரித்த மா சுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
ஆத்தும மீட்பரையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய் அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்
கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய ரத்தம் பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரேவழி
இயேசுவின் நாமத்தின் வல்லமையே இதை நாடுவோர்க்கு விடுதலையே துன்ப கட்டுகள் காவல் சிறைகள் இன்று அகற்றுவார் நீயும் நம்பிவா
அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார் அதிசயங்கள் அவர் காட்டிடுவார் உண்மை நிறைந்த உள்ளம் திறந்து உன் கர்த்தர் ஏசுவை விசுவாசிப்பாய்
கர்த்தர் உன்னை இனி கைவிடாரே கடைசிவரை தளராதே நம்பு என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர் ஏசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.