TA-1606
Tamil

மாசற்ற ஆட்டுக்குட்டி,

Maasattra Aattukutti

18
views
1ம் சரணம்

மாசற்ற தெய்வாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே

2ம் சரணம்

தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தென் தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன்.

3ம் சரணம்

திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே.

4ம் சரணம்

சுமந்தோன் இங்கெ வா வா வை உன் சுமையை என் தோள் மேலே சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே

5ம் சரணம்

சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும் சொன்னீர் படப் பறந்தொடி என்தேகம் வெண்மை நிறையும்.

6ம் சரணம்

நிறைவா கரக்கடலே மறை நிறை யாகமத்திடலே குறையா வரம்தயை பூரணம் குடிகொண்டதுன் னுடலே.

7ம் சரணம்

உடலே திருவிருந்து சுவாமி உதிரம் திருமருந்து உலகாசையைத் துறந்து எனதுளமே அதை அருந்து.

8ம் சரணம்

அருந்தப் பவச்சுமை நோவிடர் ஆறாத்துயர் சாபம் அகலும் அவர் பதச் சேவையால் ஆறுந் தேவ கோபம்.

9ம் சரணம்

ஆறும் மனந்தேறும் அவரருட்கண் என்மேல் சாரும் ஆத்மா கரையேற அவர் அன்பை ருசி பாரும்.

10ம் சரணம்

அன்பால் எனைத்தழுவி என்றன் ஆத்மக் களை யாற்றி அவர் மார்பினில் அணைத்தார் ஏழையடியேன் மனந்தேற்றி.

11ம் சரணம்

மனமோ யேசு சாந்தம் அன்பு மனத்தாழ்மையைப் பூண்டு மனுவேல் யேசுநாமம் உன்னில் மகிமைப்பட வேண்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.