TA-1609
Tamil

மாசில்லாத் தேவ புத்திரன்

Maasillaath Thaeva Puththiran

0
views
பல்லவி

பிரகாசம் யாவுந் தேவரீரின் முன்பாக மங்கிப்போகுதே; என் பாவத்தின் இருள் அனைத்தும் உமக்குள் தொலையட்டும்; ஆ, இயேசுவே, நான் உமக்கே ஒப்பாய் சுத்தாங்கமாகவும்.

1ம் சரணம்

மனசார சாவுமட்டும் “பிதாவின் சித்தமே ஆகட்டும்” என்றீர், அமர்ந்த இயேசுவே; என் மனமும் “தெய்வ சித்தம் என் நன்மை,” என்றதற்கு நித்தம் கீழ்ப்பட்டடங்க, உம்மையே பின்பற்ற, தேவரீர் சகாயம்பண்ணுவீர்; எந்நோவிலும், என் இயேசுவே, நான் உமக்கே ஒப்பாய் அமர்ந்திருக்கவும்.

2ம் சரணம்

ராப்பகல் உறக்கமற்று நல்மேய்ப்பராய்ப் பிரயாசப்பட்டு நன்றாய் விழித்தீர், இயேசுவே; நித்தம் நித்தமும் போதித்தீர், மங்கா வெளிச்சக் கண்ணனே; விழித்துக் கெஞ்சவே, நான் உம்மிடத்திலே படிக்கட்டும்; ஆ, இயேசுவே, நான்உமக்கே ஒப்பாய்விழித்திருக்கவும்.

3ம் சரணம்

நீர் நிறைந்த நேசமுள்ளோர், எல்லாரின் மேலும் தயவுள்ளோர், மகா அன்புள்ள இயேசுவே; உம்மால் தீயோர் பேரிலேயும் பகல் உதிக்கும், மாரிபெய்யும், பெரிய உபகாரியே, ஆ, இந்த உமது குணம் என் மனது அடையட்டும்; என் இயேசுவே, நான் உமக்கே ஒப்பாய் அன்பாய் இருக்கவும்.

4ம் சரணம்

குற்றமின்றி குரோதமற்று, எல்லா இகழ்ச்சியையும் பட்டு மன்னித