♪♫
TA-1614
Tamil
மெய் தேவனை துதி பெரு நன்மை செய்தார்
Maei devanae
0
views
பல்லவி
மெய் தேவனைத் துதி பெரு நன்மை செய்தார், குமாரனைத் தந்துன்னையே நேசித்தார், உன் பாவத்திற்காய் இயேசுவே மரித்தார் ! நீ மோட்சத்தில் சேர ஆருயீர் ஈந்தார் ! போற்றுவோம் (2) ஜீவ நாயகரை, நம்புவோம் (2) லோக இரட்சகரை, இம்மீட்பர் மூலம் நற்கதி உண்டாம், பிதாவின் சமூகம் கண்டடைவோம் !
1ம் சரணம்
சம்பூரண மீட்பை சம்பாதித்தனர் நல்லாசை உள்ளோர்க்கு ஈவேன் என்றார் எப்பாவியானாலும் விசுவாசம் வைத்தால் அந்நேரமே மன்னிப்புண்டாம் இயேசுவால் !
2ம் சரணம்
பேரன்பின் சொரூபி மெய்தாசருக்கே ஒப்பற்ற சந்தோத்தை அளித்தீரே ஆனாலும் பேரின்பத்தில் சேரும் போதோ, உண்டாக்கும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டோ !