மகிமையடையும் இயேசு ராஜனே
Mahimai adaiyum
மகிமையால் நிறைந்ததோர் புது சாலோம் நகரே வகித்திடுவாயே மணவாட்டியின் நிலையே அகிலத்தில் அவர் சித்தம் செய்ததால் நீயே மகிபனாம் இயேசு உந்தன் மணவாளனாமே இணையில்லா பிரபையால் புகழ் அடைந்தாயே இணைந்தாயுன் மணவாளன் இயேசுவினோடே துணையாகும் உன்னிலவர் வாசம் செய்வாரே எருசலேமே நவ எருசலேமே
திருப்பரன் குணங்கள் உன் அலங்காரமாமே அருமையாம் அவர் சிந்தை மகிமையுமாமே அருந்துயர் பாடுகள் நின் உடையாகுமாமே தருமவர் ஜெயம் உந்தன் கொடியாகுமாமே
அசைவில்லா மூலைக்கல்லாம் யேசுவின் மேலே இசைந்ததால் திருமனை நீயாகுவாயே ஆசையுடன் சேவிப்பாயுன் நேசரை நீயே வீசிடுதே அவர் அன்பின் கொடி உந்தன் மேலே
கறைதிரை குறையற்ற மாசற்ற சபையே மறைந்தே கன்மலைதனில் தங்கும் புறாவே உறைவிடம் உனக்குண்டோ இத்தரையதிலே நிறைந்தவர் பூரணமாய் இலங்குகிறாயே
தன்னிகரில்லாததோர் உன்னத நகரே பன்னிரு கற்கள் உந்தன் விலையேறும் குணமே கன்னிகையாக உன்னை காத்ததினாலே பொன்புரியாகி அதில் மகிழ்கொள்ளுவாயே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.