♪♫
TA-1628
Tamil
மெய் ஜோதியாம் நல் மீட்பரே,
maie jothiyam
18
views
1ம் சரணம்
மாக்ஷி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் அந்த மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்
2ம் சரணம்
நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது நமது நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது
3ம் சரணம்
பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே - அங்கே பாடுவோரும் ஆடுவோரும் கோடா கோடியே
4ம் சரணம்
முத்து மயமாயிலங்கும் பட்டணமது-நமது முன்னோர் பலர் போயிருக்கும் பட்டணமது
5ம் சரணம்
ஜீவநதி ஓடுகின்ற பட்டணமது - வெகு சித்திரமுடனிலங்கும் பட்டணமது
6ம் சரணம்
சாவு துக்கமேயில்லாத பட்டணமது-நிதம் சங்கீதங்கள் தான் முழங்கும் பட்டணமது
7ம் சரணம்
எண்ணிறந்த தூதர் போற்றும் பட்டணமது- அங்கே ஓயாமல் கீதம் பாடும் பட்டணமது.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.