TA-2242
Tamil

மகிமை மேல் மகிமை

Makimai Mael Makimai

23
views
பல்லவி

மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன் மறுரூபமாவேன் மனமதிலே மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் மகமே

1ம் சரணம்

உந்தன் பாதம் என்னை பலியாய் உண்மை மனதுடன் ஒப்படைத்தேன் ஏற்றுக் கொண்டருளும் தேவ பெலன் விளங்கும் தேற்றி உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால்

2ம் சரணம்

தேவ சாயல் தேவ சமுகம் பிள்ளைகள் அடையும் பாக்கியம் – எந்தன் வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன் என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால்

3ம் சரணம்

ஜீவ ஜலமே பொங்கி வருதே ஜீவ ஊற்றுகள் திறந்தனவே – தம் கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும் தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால்

4ம் சரணம்

பாதம் ஒன்றே போதும் என்றேன் பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன் இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால்

5ம் சரணம்

திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன் தூய வாழ்க்கையின் தேவை அதுவே தேவ சேவையிலே பாடு சகித்திடவே தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால்

6ம் சரணம்

ஆவி ஆத்மா தேகம் முழுதும் அன்பர் இயேசுவின் சொந்தமாமே பூரணம் அருளும் ஆயத்தபடுத்தும் பாடிப் பறந்திடுவேன் தம் ஆவியினால்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.