♪♫
TA-1630
Tamil
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி
Makizhnthu Kalikkum Vanaantharam
0
views
பல்லவி
மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் – 2 கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டு – 2 ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் அவர் நம்முடைய தேவன் – 2
1ம் சரணம்
பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபேல் முன்னே சமமாகுவாய் – 2 முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே – 2 இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே – 2
2ம் சரணம்
பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன் உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம் – 2 வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே – 2 இருப்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே – 2
3ம் சரணம்
தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார் ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே – 2 வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் – 2 இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே – 2