TA-1639
Tamil

மறவாமல் நினைத்தீரையா

Maravaamal Ninaitheeraiya

0
views
பல்லவி

மறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும் உன்னை மறவார் மறவார் இயேசு மறவார் உன்னை உருவாக்கின தேவன் மறவார்-2

1ம் சரணம்

அழைத்தவர் உன்னை மறவார் அபிஷேகம் செய்தவர் மறவார்-2 மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார்-2

2ம் சரணம்

தரிசனம் தந்தவர் மறவார் தாங்கியே நடத்திட மறவார்-2 எப்பக்கம் நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும் எலியாவின் தேவன் உன்னை மறவார்-2

3ம் சரணம்

வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் வழிகாட்டி நடத்திட மறவார்-2 வானமும் பூமியும் நிலை மாறினாலும் வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2