TA-1641
Tamil

மரித்தாரே என் ஆண்டவர்

Maritharae en andavar

18
views
1ம் சரணம்

மரித்தாரே உனக்காக குருசில் ருசித்தாரே மரணத்தின் கொடுமை முறிப்பாரே வரும் நோய்கள் விலங்குன்னில் அறவே கிறிஸ்தேசு ஜெய வேந்தரே வல்லமையுண்டே மிக அதிகாரமுண்டே வல்லவர் வார்த்தையுயிர்ப்பித்திடுமே

2ம் சரணம்

குணமாக்கி கொடும் பேய்கள் அகற்றி ரணமாற கடுங்காயங் கழுவி நிண முள்ள ததுவாக்கும் ஆத்தும மதனை பணமின்றி விலையின்றியே

3ம் சரணம்

இரையாது இருந்திடுவென்றே திரையாழி யது நோக்கி மொழிந்த அதிகாரம் மிகக்கொண்ட அவர் வார்த்தையுனது விதி நீக்கி வலி போக்குமே

4ம் சரணம்

விசுவாசித்தால் இன்றே காண்பாய் விலையேறும் மகிமையின் செயலை இலையேதும் அவரோலே இயலாத கிரியை மலையாதே சரணாகுவாய்

5ம் சரணம்

உருவேதும் ஒருபோதும் மறையா திருவார்த்தை பிழைப்பூட்டும் உனையே வருவாயே பரனேசு திருப்பாதம் விரைந்தே தருவாரே ஜெய முற்றுமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.