♪♫
TA-1645
Tamil
மீட்கப்பட்ட கூட்டமே,
meetkappatta koottamee,
16
views
1ம் சரணம்
மீட்கப்பட்ட கூட்டமே, உங்கள் மீட்பர் பேரிலே பாடி, வாழ்த்தல் செய்யுங்கள் மீட்பின் அன்பைச் சொல்லுங்கள்.
2ம் சரணம்
தேவனாம் பிதா தயை யேசுவால் உண்டானதை பார்த்துப் போற்றிப் பாடுங்கள், மீட்பையே உயர்த்துங்கள்.
3ம் சரணம்
நீடுகாலம் உங்களை கேடு செய்த ஆசையை தள்ளுதற்கு மைந்தனார், மீட்பையே உண்டாக்கினார்.
4ம் சரணம்
ஆதலால் மகிழ்வோடே போற்றிப்பாட மாந்தரே, தூதரோடும் கூடுங்கள் மீட்பையே உயர்த்துங்கள்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.