TA-1653
Tamil

மேசியா ஏசு நாயனார் எமை

Messiah yesu nayanar

21
views
பல்லவி

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோட இருப்பதால் குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்

1ம் சரணம்

ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் – அவர் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில் நித்தமும் நடத்துகின்றார்

2ம் சரணம்

எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார் புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்

3ம் சரணம்

ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் உயிருள்ள நாட்களெல்லாம் – அவர்

4ம் சரணம்

புல்லுள்ள இடங்களிலே இளைப்பாறச் செய்கின்றார் அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே அனுதினம் நடத்துகின்றார்

5ம் சரணம்

இருள்சூல் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் தகப்பன் என்னோடு இருப்பதனால் தடுமாற்றம் எனக்கில்லையே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.