TA-1654
Tamil

மிகுந்த பாவச் சேற்றிலே

Miguntha Paava Seattrilae

16
views
1ம் சரணம்

மிகுந்த தயவாலே ரட்சிக்க மீட்பரே, தெய்வீக அன்பினாலே நிறைந்த யேசுவே, நான் உம்மோடைக்யமாக நீர் என்னைக் கூப்பிட்டீர் நான் உம்மை என்றும் சார நீர் தயை காண்பிப்பீர்.

2ம் சரணம்

கல்லான இந்த நெஞ்சை மிருதுவாக்கியே, சீர்கெட்ட விருப்பத்தை கட்டோடே அழித்தே நான் என்றும் உம்மில் நிற்க அன்பாக காத்திடும்; நான் உண்மையில் நிலைக்க பெலன் கடாட்சியும்.

3ம் சரணம்

என் முழு மனதோடு லோகத்தை வெறுப்பேன், விடாத ஆவலோடு யேசுவை வாஞ்சிப்பேன்; இவ்வாஞ்சை என்றுமாக நிலைக்கும்படிக்கே, கர்த்தாவே தயவாக சகாயம், செய்யுமே.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.