TA-1657
Tamil

Cமோசம் போகாதே நண்பா

Mosam pogathe nanba

13
views
பல்லவி

மோட்ச வீட்டை நான் என்று சேர்வேன் தூய தூய தேவா அல்லேலூயா தொனி கேட்குதே அங்கே சென்று நானும் பாடுவேன்

1ம் சரணம்

பொற்தள வீதியில் உலாவுவேன் பொன் மாளிகையில் நான் தங்கிடுவேன் முள் முடி சூடின இயேசுவை பொன் முடி சூட்டி நான் போற்றிடுவேன் அல்லேலூயா

2ம் சரணம்

கண்ணீர்கள் யாவும் கர்த்தர் தாமே கனிவுடன் கரத்தால் துடைப்பாரே நல்ல போராட்ட என் ஓட்டமும் நலமுடன் ஓடி முடித்திடுவேன்

3ம் சரணம்

புதிய எருசலேம் வாசல்கள் பூரிப்புடன் என்னை அழைக்குதே எண்ணில்லா பக்தர்கள் தூதர்கள் என்னரும் இயேசுவையும் காணுவேன்

4ம் சரணம்

கல்லறைத் தோட்டம் அங்கே இல்லை குறுகின ஆயுசுள்ளோர் அங்கில்லை சாவு பவனி அங்கே இல்லை சஞ்சலமும் பஞ்சமும் அங்கே இல்லை

5ம் சரணம்

புவி யாத்திரை முடியும் போது பரதீசியில் சென்றிளைப்பாறுவேன் எக்காளம் தொனிக்கும் நேரத்தில் எழும்பி என் பங்கை நான் பெற்றிடுவேன்

6ம் சரணம்

ஜீவ புத்தகம் திறந்திடும் ஜீவ தேவன் என்னைக் கூப்பிடுவார் ஜீவனுக்குள் பிரவேசித்து ஜீவனுள்ளோர் தேசத்தில் நடப்பேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.