TA-1662
Tamil

முன்னணை வந்த விண்ணவனே

Munnanai Vantha

0
views
பல்லவி

முன்னேறி செல்வேன் தேவ தயவினால் தடைகளை தாண்டியே முன்னே செல்லுவேன் – 2 ஓ.. ஒ ஓஹோ.. ஓ மேக ஸ்தம்பமே ஓ…ஓஓஹோ.. ஓ மேக ஸ்தம்பமே தேவ சமூகமே முன்னே செல்லுதே

1ம் சரணம்

பார்வோன் சேனை என்னை விட்டு விலகி நிற்குதே ஆ ஆஹா என்னை சுற்றி பாது காக்கும் அக்கினி ஸ்தம்பமே யோர்தான் செங்கடல் என்னை கண்டு பயந்து நிற்குதே – 2 என் முன்னே செல்லும் தேவனோ சேனையின் கர்த்தரே – 2

2ம் சரணம்

என்னை பெலன் கொள்ள செய்யும் கிறிஸ்துவால் எதையும் செய்யுவேன் கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால் எனக்கெதிராய் நிற்பவன் யார் – 2 கொலியாத் போன்ற எதிரியை கண்டு நானும் பயப்படேன் – 2 என்னோடே செல்லும் தேவனோ தாவீதின் தேவனே – 2

3ம் சரணம்

சத்தியம் நீதி ஆயத்தம் சர்வாயுத வர்கமே எதிரியின் அம்பு சூழ்ச்சியை தடுக்கும் விசுவாச கேடயமே – 2 வேத வசனம் வல்லமை கூர்மையான ஆவியின் பட்டயம் – 2 என் கைகளை உயர்த்தி ஜெபிக்கும் ஜெபத்தால் எதிரியை ஜெயம் கொள்வேன் – 2