TA-1663
Tamil

Naada Irakamillaiyo

Naada Irakamillaiyo

19
views
பல்லவி

நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே – புகழ் பாடுங்கள் பாடுங்கள் பாடுங்களே பாடுறவே பரலோக மதை விட்டு பாரினில் மனுவாய் வந்தவரை

1ம் சரணம்

நேசமாய்க் காசினி நிந்தை யகற்றிட பாச மனுவேலன் பாதமுற்று மாசற்றுலகினில் மானிடனாய் வந்த இயேசு நாயகனின் நாமமேற்று

2ம் சரணம்

பூமிக்கு மேலுள்ள வானத்துக்குமுள்ள தூரமாய் பாவம் தூர்த்து விட்டு பூதல வாழ்விலே பீடறச் செய்த புண்ணியவானான இயேசுவையே

3ம் சரணம்

வல்லமை திரித்வ வானவனையே சொல்லருங் கிருபைப் பிரதாபனையே துல்லிபத்தில் ஞான தீபனையே! பெரும் நன்மை யருளும் நம் நாதனையே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.