TA-1667
Tamil

நாள்தோறும் புதிதாய்

Naal Thorum Puthithaai

16
views
பல்லவி

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

1ம் சரணம்

ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா

2ம் சரணம்

கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே ஓளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா

3ம் சரணம்

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா

4ம் சரணம்

கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன் அதையே நாடுவேன் வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில் வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா

5ம் சரணம்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும் எனக்கோ குறையில்லை குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார் கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.