TA-1672
Tamil

Naam Idaividamal Aarathikkum

Naam Idaividamal Aarathikkum

18
views
பல்லவி

நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்திடுவோம் நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இந்த உலக மெய் ரட்சகர் இயேசுவல்லால் இரட்சிப்பார் வேறு யாருமில்லை பாவ சாப ரோகங்கள் சிலுவையில் சுமந்தார் பலியாக நமக்காக மரித்துயிர்த்தார்

1ம் சரணம்

இயேசு நம்மை நேசித்தார் இந்த அன்பு நம்மை நெருக்கி ஏவுகின்றதே வேண்டாம் உலக ஆசைகள் ஆண்டவர் சித்தம் செய்வோம்

2ம் சரணம்

மீட்பின் சுவிசேஷமே கேட்டு பாவ அறிக்கை செய்து மனந்திரும்பி வீட்டார் கர்த்தரை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளாய் மாற

3ம் சரணம்

நாமும் நற்கிரியைகள் நித்தம் செய்ய கிறிஸ்துவுக்குள்ளாய் சிருஷ்டிக்கப்பட்டோம் பக்தி வைராக்கியம் உள்ளோராய் பரமனின் சேவை செய்வோம்

4ம் சரணம்

தேவன் அபிஷேகித்தார் தரித்திரருக்கு சுவிசேஷம் அறிவித்திட இதுவே அநுக்ரக காலம் இதோ இது இரட்சண்ய நாள்

5ம் சரணம்

மங்கா சுடர் ஒளியாய் மலைமேல் பட்டணம் போல் விளங்கிடுவோம் நாடு நகரம் கிராமங்களில் நற் செய்தியை கூறிடுவோம்

6ம் சரணம்

இயேசு பிரதி பலன்கள் ஏந்திக் கொண்டு வருவாரே நமக்களிக்க மகனை கடாட்சிக்கும் தந்தை போல் மகிமையில் வெளிப்படுவார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.